சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் வெளிநாடு சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.12 மணியளவில் முதியவர் உயிரிழந்தார். பிப்.,29ம் தேதி சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மார்ச் 2ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன் பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலையில் பல்வேறு பிரச்னைகள் இருந்த நிலையில், 27 நாள் சிகிச்சைக்கு பின் உயிரிழந்தார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹைபர்லிபிடமியா பிரச்னைகள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.